technology

img

இந்தியாவில் இன்று அறிமுகமான மோடோ ஜி52 ஸ்மார்ட்போன் 

50 மெகா பிக்சல் பின்புற கேமரா, 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்தியாவில் மோடோ ஜி52 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது.

கடந்த ஆண்டு வெளிவந்த மோடோ ஜி51 5ஜியின் அடுத்த வெர்ஷனாக இந்த மோடோ ஜி52 அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் மொபைல் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மொபைல் வெளியாகி உள்ளது. 

இரட்டை நானோ சிம் வசதி கொண்ட மோடோ இந்த ஜி52 ஆனது, ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்டு இயக்குகிறது. 6.6-இன்ச் முழு எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) பேளேட் டிஸ்ப்ளே 20:9 விகிதத்துடன் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. மோடோ ஜி52 ஆனது ஸ்னாப்டிரகன் 680 எஸ்ஓசி, ஆன்ராய்டு 610 ஜிபியு மற்றும் 6ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபிகளை எடுப்பது மற்றும் வீடியோ சாட்களுக்கு ஆகியவற்றின் அடிப்படையில் f/2.45 லென்ஸுடன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாருடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 

மோடோ ஜி52 ஆனது 128ஜிபி வரையிலான சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 1டிபி வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. ஃபோனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

இந்தியாவில் மோடோ ஜி52 விலை 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு ரூ 14,499 ஆகவும் 6ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு ரூ. 16,499 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோடோ ஜி52 ஆனது சார்கோல் கிரே மற்றும் பீங்கான் ஒயிட் வண்ணங்களைக் கொண்டுள்ளது. 

;